Friday, August 8, 2008

vanakkam!

ARK.Rajharajha

அன்பு நண்பர்களே
என்னைப்பற்றி கொஞ்சம் உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்!




100 படங்களுக்குமேல் டப்பிங் வசனம் எழுதிய பின் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.(இளவட்டம் இயக்க ) நான் இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான ஆட்களில் ஒருவன் .என்னை நம்பி பணம் போட்டு யாரும் நஸ்டம் ஆனதில்லை. எப்படி பட்ட படத்தையும் காசாக்கும் திறமையுள்ளவன்.1.லேடிபேச்சிலர்ஸ் (தி ஸ்வீட்டஸ்ட்திங் இங்க்லிஷ்) நான் டப்பிங் வசனம் எழுதிய முதல் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது அதன் பின் எல்லா ஆங்கிலப்படங்களும் தமிழ்பேசவைத்தேன்.ஹிந்தி,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என்று எல்லமொழி படங்களும் தமிழ் பேசவைத்தேன்.அதில் சில1, வேலா,மதுரைமாப்பிள்ளை (ஆந்திராவாலா, நா அல்லுடு என்,டி,ஆர் படம்) தும் (ஹிந்தி மனிஷாகொய்ராலா)சந்திரமதி( நேனுன்னானு நாகார்ஜுன்)தேவா (ஜெய் சிரஞ்சீவா... மெகா ஸ்டார் சிரஞ்சீவி)அலிபாபாவும்9திருடர்களும் (அந்தருதொங்கலே பிரபுதேவா,கிரண்)லிஸ்ட் இன்னும் நீளும் ..இதில தேவா இன்னும் ரிலிஸ் ஆகல நீங்க இதை படிக்கும்போது ரிலிஸ் ஆகும்னு நெனைக்கிரேன் ஒரு முக்கியமான விசயம் இவ்லொ படங்கல்ல அலிபாபா9திருடர்கள் தான் என் வாழ்க்கை மொத்தமா மாத்திடுச்சு இந்த படத்தை அசோக்,பாஸ்கர்,துரை,தயாரிச்சாங்க நான் பிஸினெஸ் பண்ணினேன்.3 லட்ச ரூபா தான் முதலீடு .வசனம் நன்றாக வொர்க் அவுட் ஆச்சு வினியோகஸ்தர்கள் முதல் காட்சி பர்த்தவுடனே அனைத்து ஏரியாக்களும் வாங்கி விட்டனர் .18 லட்சம் லாபம்.தமிழ் டப்பிங்கில் இவ்வளவு லாபம் இப்போது கிடைப்பதில்லை.மேலும் அவர்கள் மூவரும் இவ்வலவு பணம் மொத்தமாக பார்க்கிறார்கள் .தயாரிப்பு நிர்வாகிகள் மூவரும்.இதில் பாஸ்கர் என் மேல் விசுவாசத்தால் அவர் அப்பொது வேலை செய்த ஸ்வராபிசேகம் தயாரிப்பாளர்களிடம் என்னை கதை சொல்லவைத்தார் . நான் லைன் மட்டும் சொன்னேன் பிடித்துபோய் திரைக்கதைரெடிபண்ணசொன்னார்கள் .முழு திரைக்கதையும் ரெடியான நிலையில் படத்தை தெலுங்கில் டைரக்ட் பண்ண வேண்டும் என்றார்கள் . நான் மறுத்தேன் நன்பர்கள் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விசயம் வேண்டாம் என்று சொல்லாதே. என்றார்கள் .

vetri!
அவர்கள் படத்தை தெலுங்கில் பண்ணலாம் என்று சொல்லி விட்டர்கள் மறுபடி மாற்றங்கள் செய்து பார்த்தால்பெரிய அதிர்ச்சி நான் சொல்ல நினைத்த எடுக்க நினைத்த இளவட்டம் கதை மாறிப்போய்விட்டது அவர்களோ இதை படமாக எடுத்தால் எடுக்கலாம் இல்லையென்றால் இந்த படத்தை கைவிட்டி விடலாம் என்று கூறிவிட்டர்கள். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டேன். படம் ஆரம்பம் ஆனது பிரச்சினைகளும் ஆரம்பமானது.என் கருத்தை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை விலகிவிட்டேன் ..மறுபடி நண்பர்கள் அட்வைஸ் தகராறு செய்தாய் என்று பின்பு யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள்.ஒத்துப்போய்விடு என்றார்கள் அவர்களுக்காக மறுபடி ஷூட்டிங்போனேன் படம் ரெடியானது எனக்கு திருப்தியில்லை . நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் படம் பரவாயில்லை என்றார்கள் .சீதாகோகசிலுக்கா என்ற பெயரில் தெலுங்கில் 50 நாட்கள் ஓடியது..தமிழில் டப்பிங் பன்னினோம் இளவட்டம் தேவிபாரடைஸ்,கிருஸ்ணவேணி தியேட்டர்களில் 30 நாட்கள் ஓடியது. மற்ற ஊர்களில் சுமாராக ஓடியது. குறைந்த விலைக்கு விற்றோம் அதனால் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஸ்டம் இல்லாமல் கொஞ்சம் லாபம் கிடைத்தது. ஹிட் படமில்லை அதேவேலை தோல்வி படமில்லை ... இப்போது நிறைய பேர் படம் பண்ண சொல்கிறார்கள் . நான் மறுத்து விட்டேன். இப்பொது அருமையாக ஒரு கதை ரெடி பண்ணிவைத்திருக்கிறேன் வெளினாட்டுதமிழர்களை ஒன்றினைத்து அவர்களின் உதவியோடு நானே தயாரிக்க போகிறேன். என் உதவியாளகளையும் இயக்குனர்களாக்கபோகிறேன். வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஆரம்பமாகும் என் அடுத்த பட வேலைகள். (ராமாவரம் அல்லது பூங்கா நகர் ) நன்றி .